பெரியபாளையம் அருகே சேதமடைந்த ரேஷன் கடை: மாற்று கட்டிடம் கட்ட கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் கிராமத்தில் சேதமடைந்து கிடக்கும் ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள ரேஷன் கடை சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

தற்போது இந்த ரேஷன் கடை சேதமடைந்து, கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு, மேல்தளம் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மேலும் மழை பெய்தால் கடையின் உள்ளே மழைநீர் கசிகிறது. இதனால் கடையின் உள்ளே உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் நனைந்து வீணாகிறது. இதனால் இந்த ரேஷன் கடை தற்போது மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தில் செயல்படுகிறது. எனவே சேதமடைந்த ரேஷன் கடையை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி போடேந்திரபுரம் விலக்கில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!

லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி..!!