40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலையாற்றின் கரைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் பகுதியில் சேதமடைந்த கொசஸ்தலையாற்றின் கரைகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து ஆறு, ஏரிகளில் நீர் நிரம்பி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பூண்டி ஏரியில் இருந்து முதலில் 1,000 கன அடி வீதம் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

பின்னர் படிப்படியாக உயர்த்தி வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் கரைகள் இருபுறமும் சேதமடைந்துள்ளது. தற்போது நேற்று 600 கன அடியாக குறைக்கப்பட்டதால், குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே தாமரைப்பாக்கம் கொசஸ்தலை ஆற்றின் கரைகளை மழை நின்றதும் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டம்

செம்பரம்பாக்கம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு

வீட்டில் இருந்து திருடிய ஏடிஎம் கார்டு மூலம் ரூ.70 ஆயிரம் அபேஸ்