உ.பி.யில் போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்ட தலித் சிறுவன் உயிரிழப்பு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ஹேரி மாவட்டம் சிஸவான் காலா கிராமத்தை சேர்ந்த 16 வயது தலித் சிறுவனுக்கு திருட்டு வழக்கு ஒன்றில் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த 3ம் தேதி ஹேரி போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் கடுமையாக தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டான். உடனே லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக எஸ்.பி. கணேஷ் பிரசாத் சஹா தெரிவித்துள்ளார். இதனிடையே, சிறுவன் இறந்த செய்தியை அறிந்ததும் அக்கிராம மக்கள், சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்ய கோரி, தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்