சென்னை: பிரஜின் நடிப்பில் வெளியான டி3 படத்தை அனுமதியின்றி ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என்று ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. டி3 படத்தின் மூலம் திரட்டப்பட்ட தொகையின் கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். இயக்குநர் முத்துபாலாஜி தரவேண்டிய 4கோடியை தராமல் வெளியிடக் கூடாது என சாமுவேல் காட்சன் வழக்கு தொடர்ந்துள்ளார்.