சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை: ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. சீமைக் கருவேல மரங்களை அகற்றும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் தான் அவை மீண்டும்-வளராமல் தடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பெற்றோரை திருமணமான அரசு ஊழியரின் காப்பீட்டு திட்டத்தில் குடும்ப உறுப்பினராக சேர்ப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராயத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்: ஆயுள்தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தது