சிலிண்டர் விலை குறைப்பு தேர்தல் நேர நாடகம்: பிரதமர் மோடி அறிவிப்பு பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சனம்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைப்புக்கான அறிவிப்பு தேர்தல் நேரத்து நாடகம் என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். பிரதமர்மோடியின் இந்த அறிவிப்பு எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை என்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை கவனிக்க வேண்டும்.

என்றும் சரத் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்யாமல் தேர்தல் அறிவிக்கபட போகிற நேரத்தில் விலையை குறைப்பது இன்னொரு நாடகம் தான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். ரூ.395 விற்க வேண்டிய சிலிண்டரை ரூ.1000 விற்று கொண்டு ரூ.100 குறைந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ் புட் விமர்சித்துள்ளார்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!