மிக்ஜாம் புயல் வலுவிழந்து வடகிழக்கு தெலுங்கானாவில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியது: இந்திய வானிலை மையம்

டெல்லி: மிக்ஜாம் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமான நிலையில் மேலும் வலுவிழந்து, வடகிழக்கு தெலுங்கானாவில் இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகி, காற்றழத்த தாழ்வு மண்டலமாக மாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, பின்னர் மிக்ஜாம் புயலாக உருவானது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. இந்த புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நேற்று காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதகளில் ஆந்திராவின் காவாலிக்கு வட கிழக்கே சுமார் 40 கிமீ தொலைவிலும், நெல்லூருக்கு வடக்கு- வடகிழக்கே சுமார் 80 கிமீ தொலைவிலும, பாபட்லாவுக்கு தெற்கு – தென்மேற்கே சுமார் 80 கிமீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தெற்கு-தென் மேற்கே சுமார் 140 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலை கொண்டு இருந்தது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமான நிலையில் அது மேலும் வலுவிழந்து இன்னும் ஒருசில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இன்று தெலங்கானா, சத்தீஸ்கர், தெற்கு கடலோர ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு