சைபர் க்ரைம் போலீஸ் எனக்கூறி டாக்டரை மிரட்டி ரூ.1 லட்சம் பறிப்பு

அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (33). இவர் கடந்து 3 நாட்களுக்கு முன்பு, நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், முகப்பேர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். எனது செல்போனுக்கு வந்த ஒரு அழைப்பில், பெண் ஒருவர் பேசினார். சிறிதுநேரம் கழித்து வேறு ஒரு செல்போன் என்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது, பேசிய மற்றொரு பெண், தான் சைபர் க்ரைம் போலீஸ் என்றும், உங்கள் மீது ஒரு பெண் புகார் அளித்துள்ளார். உங்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.1 லட்சத்தை பறித்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இது தொடர்பாக சிவகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை