முதல்வர் குறித்து அவதூறு விழுப்புரம் கோர்ட்டில் சி.வி.சண்முகம் எம்பி ஆஜர்

விழுப்புரம்: விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் கடந்த 2022 பிப்ரவரி 28 மற்றும் ஜூலை 25ல் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழக அரசு மற்றும் முதல்வரின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதேபோல் 2022 செப்டம்பர் 18ல் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் எம்பி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 3 தனித்தனி அவதூறு வழக்குகள் தொடரப்பட்டு நடைபெற்று வருகின்றன.

நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி ராதிகா முன்பு வந்தது. அப்போது சி.வி. சண்முகம் எம்பி நேரில் ஆஜரானார். தொடர்ந்து அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி இந்த மூன்று வழக்குக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதற்கான நகலை சமர்ப்பித்தனர். இதனை தொடர்ந்து ஜூன் 24ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார்.

 

Related posts

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை

“ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும்” : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை

ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!!