அதிமுக – பாமக கூட்டணிப் பேச்சுவார்த்தையா?.. பாமக நிறுவனர் ராமதாசுடன் சி.வி.சண்முகம் சந்திப்பு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். அதிமுக, பாஜ கூட்டணி முறிந்த பிறகு அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் யாருடனும் சேராமல் உள்ளனர். பாஜ மற்றும் அதிமுக முன்னணி தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனி்சாமியின் உத்தரவுக்கிணங்க பாமக, தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக ஓரளவு நடத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் சேருவதற்கு அதிக சீட், மாநிலங்களவை எம்பி, அதிக பணம் கேட்டு கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் அதிமுக, பாமக கூட்டணி தொடர்பாக சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என பாமக தலைவர் அன்புமணி கூறியிருந்தார். கூட்டணி அமைத்து போட்டியிட பாமக முடிவெடுத்துள்ள நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பாமக போட்டியிட விரும்பும் தொகுதி எண்ணிக்கை குறித்து இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!