சென்னை: தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மனுவுக்கு அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 2023-ல் அதிமுக பொதுக்கூட்டத்தில் முதல்வருக்கு எதிராக அவதூறு கருத்துகளை பரப்பியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.