கியூட் நுழைவுத்தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

சென்னை: பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு தேசிய தேர்வு முகமை பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் கியூட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் 261 மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த முன்வந்தன. அதன்படி, கியூட் நுழைவுத் தேர்வு 15 பாடங்களுக்கு பேப்பர்-பேனா முறையிலும், 48 பாடங்களுக்கு கணினி வழியிலும் கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டது. தேர்வு முடிவு ஜூன் 30ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீட், நெட் தேர்வு பிரச்சினைகளால் கியூட் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நீட் தேர்வு இறுதி மதிப்பெண் பட்டியலை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில், கியூட் தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகளை தேசிய தேர்வு முகமை தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேனா-பேப்பர் மற்றும் கணினி வாயிலாக நடந்த கியூட் நுழைவு தேர்வு இறுதி விடைக்குறிப்புகள் https://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Related posts

திறந்தவெளி அரங்கு உட்பட மதுரை கலைஞர் நூலகத்தில் ரூ12.80 கோடியில் கூடுதல் வசதி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

அணையில் மூழ்கி இன்ஜினியர் பலி

போதையில் படுத்திருந்த திருடன் கார் ஏறியதில் தலை நசுங்கி பலி