சுங்கச்சாவடி சூறை: எம்எல்ஏ, 300 பேர் மீது வழக்கு

திருவெறும்பூர்: சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளரும், மணப்பாறை எம்எல்ஏவுமான அப்துல் சமது தலைமையில் கட்சியினர் ஒரு மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா, கண்ணாடி கூடங்கள், வழிவிடும் எல்இடி தடுப்புகளை அடித்து நொறுக்கினர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் அனுமதியின்றி கூடியது, சுங்கச்சாவடியை சேதப்படுத்தியது என 2 பிரிவுகளின்கீழ் மணப்பாறை எம்எல்ஏ அப்துல் சமது உட்பட 300 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

Related posts

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்

அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் 7.5% உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்: ஐகோர்ட் கிளை

மும்பையில் நடிகர் சல்மான் கானின் தந்தைக்கு பெண் ஒருவர் மிரட்டல்