நடப்பாண்டில் நாட்டுக்கு பெருமளவில் பயன்தரும் முன் முயற்சிகள், சமூகம் சார்ந்த திட்டங்கள் மேற்கொள்ளப்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தகவல்

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள ‘இன்குபேஷன் செல்’ பல்வேறு கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவுத் திட்டங்களை வளர்த்தெடுத்தல், அதற்கு தேவையான ஆதரவுகளை வழங்குதல், அவற்றை மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், 2024ம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் பணிகள், திட்டங்கள் குறித்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

2023ம் ஆண்டில் சென்னை ஐ.ஐ.டி. பல லட்சியங்களை அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை ஐ.ஐ.டி. சான்சிபார் வளாக திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும் ஆண்டில் மேலும் 2 புதிய படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதேபோல் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதிக எண்ணிக்கையிலான திட்டப் பணிகள் முடிக்கப்பட இருக்கின்றன. மேலும் 2024ம் ஆண்டில் நாட்டுக்கு பெருமளவில் பயன் தரும் பல்வேறு உற்சாகமான முன்முயற்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

2024ல் 100 புத்தாக்க நிறுவனங்களை தொழில் ஊக்குவிப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன. தேசிய தரக் கட்டமைப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்ட நம்பர் 1 தரவரிசையை தக்க வைக்க மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். இதுமட்டுமல்லாமல், உலக தரவரிசையிலும் உயர் தரவரிசைக்கு செல்ல விரும்புகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்