Sunday, September 8, 2024
Home » நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை 9.4 சதவீதம் உயர்வு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை 9.4 சதவீதம் உயர்வு

by Lavanya

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை 9.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.நடப்பு 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் வாகன விற்பனை புள்ளி விவரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, டூவீலர்கள் விற்பனை 12.56 சதவீதம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை 11.36 சதவீதமும், பயணிகள் வாகன விற்பனை 2.53 சதவீதமும் உயர்ந்துள்ளன. வணிக பயன்பாட்டு வாகனங்கள் 0.7 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் டிராக்டர்கள் விற்பனை 12.44 சதவீதம் சரிந்துள்ளது.முதல் காலாண்டில் மொத்தம் விற்பனையான வாகனங்கள் எண்ணிக்கை 61,91,225. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9.4 சதவீதம் அதிகம்.

இந்தஆண்டு பருவமழை முன்கூட்டியே துவங்கி விட்டது. மகாராஷ்டிரா வரை பருவமழை எதிர்பார்த்த தேதிக்கு முன்னதாகவே வந்து விட்டது. ஆனால், மேற்கு வங்கம், பீகார், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பருவமழை தாமதம் ஆகி விட்டது. இதனால் அந்த மாநிலங்களில் காரிப் பருவ விதைப்பு பணிகளும் தாமதம் ஆகி விட்டன. குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு மண்டலங்களில் ஊரக பகுதிகளில் விதைப்பு பணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதுபோல் நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவும், கடும் வெப்ப அலை வீசியதாலும் மே, ஜூன் மாதங்களில் வாகனங்கள் வாங்கும் முடிவை பலரும் ஒத்திப்போட்டு விட்டனர். இதனால் வாகன விற்பனை 13 சதவீதம் சரிந்தது. அந்த காலக்கட்டத்தில் மூன்று சக்கர வாகன விற்பனை மட்டுமே கணிசமாக உயர்ந்தது என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

eighteen − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi