கரன்சி நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை

பணி: Process Assistant Grade- I (Non-Executive Cadre): மொத்த காலியிடங்கள்: 39.

துறை வாரியாக காலியிடங்கள் விவரம்:

1. மெக்கானிக்கல்: 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-2,பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2, எஸ்டி-1).
2. எலக்ட்ரிக்கல்: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1)
3. எலக்ட்ரானிக்ஸ்: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1)
4. கெமிக்கல்: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
5. பல்ப் மற்றும் பேப்பர்: 6 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)
6. சிவில்: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1)
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
7. வேதியியல்: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: வேதியியல் பாடத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி., பட்டம்.
8. அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (பொது). தகுதி: 60% மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சி.
9. ஆபீஸ் அசிஸ்டென்ட்: 2 இடங்கள் (ெபாது).

சம்பளம்: ரூ.24,500. வயது: 30.06.2024 தேதியின்படி 18 முதல் 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/ மாற்றுத் திறனாளிகளுக்கு ஒன்றிய அரசின் விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசி, பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.600/-. எஸ்சி/ எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.bnpmindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2024.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை