ஹல்தாவணியில் ஊரடங்கு உத்தரவு அமல்

தெஹ்ராதூண்: உத்தரகாண்ட் மாநிலம் ஹல்தாவணி பகுதியில் கலவரம் காரணமாக பதற்றம் நீடிப்பதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹல்தாவணி பகுதியில் மதரஸாவை இடிக்க முயன்றபோது போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸ்காரர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால் வன்முறை மூண்டது; 150-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஹல்தாவணி பகுதியில் பதற்றம் நீடிப்பதை அடுத்து உத்தரகாண்ட் அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது