கடலூர் மாநகராட்சியில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்கள் மாயம்: மேயர் ஆய்வு

கடலூர்: கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துப்புரவு பணிக்கான வாகன பயன்பாடு மாயமானது குறித்து புகாரைத் தொடர்ந்து மேயர் சுந்தரி ராஜா ஆய்வு மேற்கொண்டார் .முறையான பயன்பாடு இல்லாமல் மற்றும் வாகனங்கள் மாயமானது தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டது தொடர்ந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடலூர் மாநகராட்சி 45 வார்டு பகுதிகளைக் கொண்டது. இதில் நான்கு மண்டலங்கள் மற்றும் 11 சுகாதார பிரிவு பகுதிகளாக பிரிக்கப்பட்டு துப்புரவு உள்ளிட்ட பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது..

சுகாதார பணிக்கான வாகனங்கள் கடந்த ஆண்டு தமிழக அரசு கடலூர் மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி மூன்று சக்கர வாகனங்கள் வீதி வீதியாக செல்வதற்கு வசதியாக வழங்கப்பட்டது.. இது ஒன்று விலகிரக வாகனங்கள் பேட்டரி வாகனங்கள் என 152 வாகனங்கள் வழங்கப்பட்டது அனைத்து பாடும் பகுதிகளும் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்களும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்புரவு பணியில் தனியார் நிறுவனத்தின் முறையான செயல்பாடு இன்மை மற்றும் வாகனங்கள் உரிய முறையில் பராமரிப்பு இல்லாமலும் பல பொருட்கள் மாயமாகி உள்ளது எனவும் மேயருக்கு புகார்கள் கிடைக்கப்பெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது . அப்பொழுது வாகனங்கள் சில மாயமானதும் முறையான பராமரிப்பு இல்லாததும் கண்டுபிடிக்கப்பட்டு மேயர் சுந்தரி ராஜா பரிந்துரையின் பெயரில் மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதற்கிடையே இன்று காலை அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள துப்புரவு பணிக்கான வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது .மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகர ஆணையர் டாக்டர் அனு, நகர் நல அலுவலர் டாக்டர் எழில் மதனா முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல கழு பிரசன்னா, இளையராஜா ,மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். ஆய்வில் 152 வாகனங்கள் துப்புரவு பணிக்காக மாநகராட்சி இடம் இருந்து தனியார் நிறுவனம் பெற்று பயன்படுத்தி வந்த நிலையில் 60 துப்புரவு பணிக்கான சைக்கிள்கள் மாயமானதும் இதுபோன்று பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவை பராமரிப்பு இல்லாமல் கிடப்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது .இரண்டு நாட்களில் வாகன பயன்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மேயர் உத்தரவிட்டார். இச்சம்பவம் பரப்பை ஏற்படுத்தியது.

Related posts

தீப்பிடித்து எரிந்த தயாரிப்பாளர் கார் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டு நாசம்: திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து 3 பேர் பலி