முன்னாள் முதல்வர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி: ஐயப்பன் எம்எல்ஏ ஏற்பாடு

கடலூர்: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூறாவது பிறந்த நாளையொட்டி கடலூரில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு திமுகவின் திராவிடமாடல் அரசின் சாதனைகளின் முழக்கங்களுடன் 10,000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. ஐயப்பன் எம்எல்ஏ ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இப்பேரணிக்கு லீமா ஐயப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், சுமதி ரங்கநாதன்,மகேஸ்வரி விஜயன்,ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

டாக்டர் பிரவீன் ஐயப்பன் வரவேற்றார் .இந்த பேரணி கடலூர் ஜவான் பவன் சாலையிலிருந்து தொடங்கப்பட்டு தமிழக அரசின் சாதனைகள் முழக்கங்களோடு அண்ணா மேம்பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் ரெட்டியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.இதனை தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை  சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வழங்கினார்.

இந்த எழுச்சிப் பேரணியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வி.எஸ். எல். குணசேகரன், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் கே.ஜி.எஸ் தினகரன், வக்கீல் சுந்தர், தொழிலதிபர் சித்ராலயா ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், தொழிலதிபர் உமா சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், பாருக் அலி, கர்ணன் மற்றும் நிர்வாகிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் , அனைத்து நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்