கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள அமைச்சர்களை அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கனமழை பெய்யக்கூடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ முன்னெச்சரிக்கை மற்றும்‌ நிவாரண நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளும்‌ பொருட்டு அமைச்சர்களை அனுப்பி வைக்க முதலமைச்சர்‌ உத்தரவிட்டுள்ளார்‌. திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, திருவாரூர்‌, புதுக்கோட்டை, இராமநாதபுரம்‌, சிவகங்கை, மதுரை, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ ஆகிய 13 மாவட்டங்களின்‌ நியமிக்கப்பட்டுள்ள மூத்த இந்திய ஆட்சிப்‌ பணி அதிகாரிகள்‌ கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும்‌ நிவாரணப்‌ பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்‌. மாநில/ மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்‌ 24 மணி நேரமும்‌ முறையே 1070 மற்றும்‌ 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும்‌, கூடுதலான அலுவலர்களுடனும்‌ இயங்கி வருகின்றன. பொதுமக்கள்‌, Whatsapp எண் 94458 69848 மூலம்‌ புகார்களை பதிவு செய்யலாம்‌.

முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் சென்னை, சேப்பாக்கத்தில்‌. உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து கடலூர்‌ மற்றும்‌. நாகப்பட்டினம்‌ மாவட்ட ஆட்சியர்களை காணொலி வாயிலாக தொடர்பு கொண்டு கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌. மேலும்‌, நிவாரண முகாம்களில்‌ தங்கவைக்கப்படும்‌ பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பாண குடிநீர்‌ மற்றும்‌ மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கினார்‌. மேலும்‌, முதல‌மைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தரை தொலைபேசியில்‌ தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான எச்சரிக்கை குறித்து கேட்டறிந்தார்‌.

Related posts

அமெரிக்காவில் நடக்கும் தேர்தலில் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்: ஜனநாயக கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கு புதிய எரிபொருள்; ரஷ்ய நிறுவனம் உற்பத்தியை தொடங்கியது: 18 மாதம் தடங்கலின்றி மின் உற்பத்தி செய்ய முடியும்

ஹமாஸ், ஹிஸ்புல்லா தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை; ஈரான் – இஸ்ரேல் போர் மூளும் அபாயம்: ஓமன் நாட்டில் போர் விமானங்களை அமெரிக்கா நிறுத்தியதால் பதட்டம்