கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!

கடலூர்: கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொலை வழக்கில் 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 20 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசைமணி உள்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2018ம் ஆண்டு தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவர்களுக்கு இடையே நடந்த மோதலில் சோனாங்குப்பத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் பஞ்சநாதன் அடித்து கொலை செய்யப்பட்டார். 5 ஆண்டுகள் வழக்கை விசாரித்து வந்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்