கடலூர் கடற்கரை கிராமங்களில் ஒரு வாரத்திற்கு பிறகு மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள்.!

கடலூர்: ஒரு வாரத்திற்குப் பிறகு கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக, கடல் பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என்பதால், கடலூர் மாவட்டத்தில் இருந்து மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 30ம் தேதி மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை புயல் கரையை கடந்ததால் மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இதை அடுத்து நேற்று முதல் மீனவர்கள் சிலர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். ஆனால் பெரும்பாலான மீனவர்கள் இன்று காலை முதல் மீன் பிடிக்க சென்றனர்.

கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், தாழங்குடா, அய்யம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதற்காக ஏற்கனவே தங்கள் படகுகளில் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர், டீசல் மற்றும் ஐஸ் கட்டிகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். இவர்கள் தங்கள் படகுகளுக்கு படையலிட்டு, கடல் தேவதையை வணங்கி மீன்பிடிக்க சென்றனர். இதே போல அதிகாலை பைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பியதால், கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி காணப்பட்ட மீன்பிடித்துறைமுகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!