கடலூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்

சென்னை: கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்தின் வலதுபுற முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் பஸ் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தோருக்குக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “கடலூர், பட்டம்பாக்கம் பகுதியில் இரு தனியார் பேருந்துகள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர், பல்வேறு நபர்கள் காயமடைந்து உள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

மேலும் விபத்தில் காயமுற்றோருக்கு உயரிய சிகிச்சை அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் வினாடி-வினா போட்டி: வரும் 9ம் தேதி தொடக்கம்