கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?: எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து இருக்கும் நிலையில் அதற்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்த எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர்; உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதும் இந்தியாவின் டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.3 இழப்பை தாங்கள் சந்தித்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விற்பனையில் கிடைக்கும் லாபம் ரூ.3 குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களின் நிகர லாபம் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் வரலாறு காணாத அளவு அதிகரித்து ரூ.69,000 கோடியை தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கச்சா எண்ணெய் விலை குறைவு போக்கு அடுத்த காலாண்டிலும் தொடர்ந்தால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.

 

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு