ஓடும் ரயிலில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை சிஆர்பிஎப் வீரர் கைது

ஜோலார்பேட்டை: பெங்களூருவை சேர்ந்த 38 வயது பெண், நேற்று முன்தினம் மாலை 10 வயது மகளுடன், விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இவர்களது இருக்கை எதிரே 38 வயது நபர் பயணம் செய்தார். அவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சக பயணிகள் பிடித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம், நாய்க்கனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்(38) என்பதும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் சிஆர்பிஎப் வீரராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!