கோவை விமான நிலையத்தில் உள்ளே விடாமல் அமைச்சர் முத்துசாமியை தள்ளிவிட்ட சிஆர்பிஎப் வீரர்

கோவை: ஈரோடு மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி மும்பை செல்வதற்காக நேற்று கோவை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரை வரவேற்க கோவை விமான நிலையத்திற்கு வீட்டுவசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி வந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த சிஆர்பிஎப் வீரர், அமைச்சர் முத்துசாமியை விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்காமல் அவரது நெஞ்சில் கைவைத்து தடுத்து நிறுத்து தள்ளிவிட்டுள்ளார். இதனை பார்த்த திமுக தொண்டர்கள் ஆவேசமடைந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவர் அமைச்சர் என தெரியவில்லை என கூறியதாக தெரிகிறது. இதனால், ஆவேசமடைந்த தொண்டர்கள் தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்து தெரியாத நபர்களை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிக்கு வைத்தது தான் இதற்கு காரணம் என தெரிவித்தனர். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறுகையில்,“பாதுகாப்பு கருதிதான் காவல்துறையினர் அப்படி செய்தார்கள். இதனை பெரிதாக்க வேண்டாம். ேவண்டும் என்று அவர்கள் செய்யவில்லை. வேண்டும் என்று செய்திருந்தால் அதனை நாங்கள் கண்டிப்போம். பாதுகாப்பு கருதி தான் செய்துள்ளார்கள்’’ என்றார்.

Related posts

வாதங்கள் நிறைவடைந்த ஒரு வழக்கில் புதிய சாட்சியங்களை விசாரிக்க சட்டத்தில் இடமில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருப்பதியில் லட்டு கலப்பட விவகாரம்; திண்டுக்கல் ஏஆர் டெய்ரி உரிமையாளர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

பிரதமர் குறித்த கார்கேவின் கருத்து வெறுக்கத்தக்கது: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம்