செங்கல்பட்டு அருகே பளு தாங்காமல் தடம்புரண்ட சரக்கு ரயில்.. பேருந்து நிலையங்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே பளு தாங்காமல் தண்டவாளம் துண்டு துண்டாக உடைந்து சரக்கு ரயில் தடம் புரண்டதால் அந்த தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு அருகே அதிக பாரம் தாங்காமல் தண்டவாளம் உடைந்து தடம் புரண்டது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கிய நிலையில் பெட்டிகளை அகற்றி சேதமடைந்த இரும்பு பாதையை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. ரயில் விபத்து காரணமாக செங்கல்பட்டு வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதேபோல் செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, திருமால்பூர் – சென்னை கடற்கரை, காஞ்சிபுரம் – சென்னை கடற்கரை வரையிலான ரயில்கள் தாமதமாக வருவதால் கல்லூரி, பணிக்கு செல்வோர் தவிப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். தண்டவாளம் சீரமைப்பு காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வரையிலான புறநகர் மின்சார ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

இதனால் மின்சார ரயிலுக்காக செங்கல்பட்டில் காத்திருந்த பயணிகள் இயக்கப்படும் ஓரிரு ரயிகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றன. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து செங்கல்பட்டில் இருந்து பிறபகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. கல்லூரி, வேலைக்கு செல்வோர் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!