கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

தேவையான பொருட்கள் :.

சிக்கன் – 1
காய்ந்த மிளகாய் – 5
பச்சை மிளகாய் – 5
எலுமிச்சை – 1
கரம் மசாலா – 2
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :.

காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.2 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கிளறி 5 நிமிடம் வைக்கவும், வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார். சூடாக பரிமாறவும்.

Related posts

கலாக்காய் ஜூஸ்

அன்னாசி தக்காளி இனிப்பு பச்சடி

காரல் மீன் சொதி ரெசிபி