குற்றவியல் சட்டங்கள்: புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

சென்னை: 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் இந்தி திணிக்கப்படுவதை கண்டித்து புதுச்சேரியில் ஜூலை 8-ல் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது. புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்களுக்கு மீண்டும் ஆங்கிலத்தில் பெயர் சூட்ட அதிமுக வலியுறுத்தியது. ஜூலை 8-ம் தேதி காலை 10 மணிக்கு புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

Related posts

திருச்சியில் நள்ளிரவு காளி கோயிலில் அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை : மேளம் அடித்து சங்கு நாதங்கள் முழக்கம்

அக். 12ம் தேதி பழநி மலைக்கோயிலில் பகலில் நடையடைப்பு

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது