நீண்ட நாளாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் வலியுறுத்தல்

சென்னை: நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மீது தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என்று அனைத்து குற்ற வழக்குகள் தொடர்வு இயக்குநர்களிடம், தமிழ்நாடு அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா வலியுறுத்தியுள்ளார். நீதிமன்றங்களில் ரிமாண்ட் தள்ளுபடி செய்ய மனுக்கள் தாக்கல் செய்யும்போது வழக்கின் ஆவணங்களைக் கவனமாகப் பரிசீலித்து, நீதிமன்றத்திற்கு அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு வழக்குரைஞர்கள் தேவைப்படும் அனைத்து நேரங்களிலும் காவல் துறையினர் எளிதில் சந்திக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு