தேச துரோக குற்றத்திற்கு எதிரான மனுக்கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124ஏ-ஐ (தேச துரோக சட்டப் பிரிவுகள்) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பான இன்றைய விசாரணையின் போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்திய தண்டனைச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய நியாய சன்கிதா என்ற புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. புதிய சட்டமானது நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.

தேச துரோக சட்டம் சரியானது தானா? என்பதை ஆராயும் விவகாரத்தை வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘தேசத் துரோக குற்றத்திற்கு எதிரான மனுக்களை, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிடப்படுகிறது’ எனக்கூறி ஒன்றிய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது