பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி


சண்டிகர்: பஞ்சாபில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டம் நங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்தது. வாடகை வீட்டில் இயங்கி வந்த இந்த பட்டாசு ஆலையில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது