மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்னை 6 முறை கொல்ல முயன்றனர்: கேரள காங். தலைவர் சுதாகரன் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 6 முறை தன்னை நேரடியாக கொல்ல முயன்றதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். போலி புராதனப் பொருட்களை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட மோன்சன் என்பருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சுதாகரன் மீது சமீபத்தில் குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் சுதாகரனை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில் சுதாகரனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பலமுறை கொல்ல திட்டமிட்டதாக இக்கட்சியை சேர்ந்த சக்திதரன் என்பவர் கூறியது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கூறியது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்னை 6 முறை நேரடியாக கொல்ல முயற்சித்தனர்.

1992ல் நான் காங்கிரஸ் கட்சியின் கண்ணூர் மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்னை கொல்வதற்கு திட்டம் தீட்டினர். ஒவ்வொரு முறையும் நான் மயிரிழையில் உயர் தப்பினேன். 6 முறையும் கண்ணூர் மாவட்டத்தில் வைத்துத் தான் கொலை முயற்சிகள் நடைபெற்றன. இவை எனக்குத் தெரிந்து நடந்தவை ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி