பசுக்களை ஆற்றில் தள்ளிவிட்ட 3 பேர் கைது

சாத்னா: மத்தியப்பிரதேசத்தில் சுமார் 20 பசுக்களை ஆற்றில் தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் சாத்னா மாவட்டத்தில் பாம்ஹோர் ரயில்வே பாலத்துக்கு கீழே ஓடும் சாத்னா ஆற்றில் கும்பல் ஒன்று நேற்று முன்தினம் பிற்பகல் அடுத்தடுத்து பசுகளை தள்ளிவிட்டது. ஆற்றில் சுமார் 50 பசுக்ககளை இந்த கும்பல் தள்ளியுள்ளது. சுமார் 15 முதல் 20 பசுக்கள் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் பசுக்களை ஆற்றில் தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து இது குறித்து நாகாட் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் தள்ளிவிடப்பட்ட பசுக்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த கும்பல் எதற்காக பசுக்களை ஆற்றில் தள்ளி கொன்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துங்கள்; இந்தியாவுக்காக வாக்களியுங்கள்: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்!!

மேலும் 10 மீனவர்களுக்கு ரூ.3.5 கோடி அபராதம்: இலங்கை நீதிமன்றம் முன் தமிழ்நாடு மீனவர்கள் தர்ணா!!