அண்ணாமலை நடைபயணத்தில் ரகளை பாஜவினரை தலைதெறிக்க ஓடவிட்ட காட்டு மாடு

கொடைக்கானல்: கொடைக்கானலில் நடந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணத்தின்போது, காட்டு மாடு புகுந்ததால் தொண்டர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று மாலை நாயுடுபுரம் பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். சிறிது நேரத்திலேயே கூட்டத்தின் இடையே காட்டு மாடு ஒன்று புகுந்தது. இதனை கண்ட பாஜ தொண்டர்கள் தலைதெறிக்க அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நடைபயணத்துக்காக இருபுறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். அண்ணாமலை நடந்த இடத்தில் இரண்டு பள்ளிகள் உள்ளன. மதியம் 2 மணிக்கு தொடங்க வேண்டிய நடைபயணம் 3.30 மணிக்கு தொடங்கியதால் அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வாகனங்களில் இருந்து பாதி தூரத்திலேயே இறக்கி விடப்பட்டு நடந்து சென்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி