கோவிட் தடுப்பூசி நிபந்தனைகளை தளர்த்துகிறது அமெரிக்கா: இந்தாண்டு யு.எஸ். ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பது உறுதி

வாஷிங்டன்: கோவிட் தடுப்பூசி நிபந்தனைகளை அமெரிக்கா தளர்த்த முடிவு செய்துள்ளதால் எதிர்வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட் லேண்ட் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அமெரிக்கர்கள் அல்லாதா நபர்கள் அந்த நாட்டிற்கு நுழைய வேண்டும் என்றால் நிச்சயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

ஆனால், ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாததால் கடந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதனால் அவர் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். இந்த நிலையில் வரும் மே 11-ம் தேதி உடன் கோவிட் தடுப்பூசி நிபந்தனைகளை அமெரிக்கா தளர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் தடுப்பூசி செலுத்தாமலே பிரபலமான யு.எஸ். ஓபன் டென்னிஸில் ஜோகோவிச் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. யு.எஸ். ஓபன் கிராண்ட் லேண்ட் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி