கண்ணை மூடியும் காதை பொத்தியும் இருப்பவங்களுக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் ரகுபதி சரவெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆளுநரை ஆதரிப்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். ஆளுநரின் நடவடிக்கைகளை மனசாட்சி உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனால் இதுபற்றி கூறுவது சரியாக இருக்காது. எங்களது வழக்கறிஞர்கள், இது சம்பந்தமான சரியான வாதங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைப்பார்கள். தேர்தல் பத்திரங்கள் அரசியல் அமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் கூறியது சரியானதுதான்.

இல்லை என்றால், கருப்பு பணத்தை சேர்த்து அரசியல் கட்சிகளுக்கு கொடுத்து விடுவார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை, எங்கள் தலைவர் வரவேற்றுள்ளார். இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களை நிறைவேற்றியுள்ள அரசு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசு. எந்த விதமான திட்டங்களும் இல்லை என்று, கண்ணை மூடிக்கொண்டு பேசுகின்றவர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. காதை பொத்திக் கொண்டு இருக்கிறவர்களுக்கும், நாங்கள் பதில் சொல்ல முடியாது. கண்ணையும், காதையும் திறந்து கேட்டால் தெரியும், பார்த்தால் புரியும். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.

Related posts

கோவை மருதமலை கோயிலில் காட்டு யானை: வனத்துறை எச்சரிக்கை

சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட 7 போலீசார் கூண்டோடு மாற்றம்

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்