நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தது ஐகோர்ட் கிளை..!!

 

மதுரை: நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா ஐஏஎஸ்-க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் அப்பகுதியில் அரசு பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். தனது பணிக்காலத்தை பணி வரன்முறை செய்து பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி 2016ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றத்தில், காவலாளி சிவலிங்கம் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 2016ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த வழக்கில் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இந்நிலையில், வழக்கு நீதிபதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் நேரில் ஆஜராக விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருக்கிறார். ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், மூத்த ஐஏஎஸ் அதிகாரி பொன்னையாவிற்கு பிறப்பித்த பிடிவாரண்டை முறையாக செயல்படுத்தி அதிகாரியை நேரில் ஆஜர்படுத்த, சென்னை காவல் ஆணையருக்கும் உத்தரவு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்