அழகு முத்துக்கோன் சிலைக்கு நாசே.ஜெ.ராமச்சந்திரன் மரியாதை

சென்னை: இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த வீரர்களில் முக்கியமான வீரராக திகழ்ந்தவர் அழகு முத்துக்கோன். இவரின் 267ம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் குருபூஜை எழும்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள அவரது சிலை முன்பு இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு யாதவ மகாசபையின் மாநில தலைவரும் அமெட் பல்கலைக்கழக வேந்தருமான நாசே ஜெ.ராமச்சந்திரன் கலந்துகொண்டு அழகு முத்துக்கோன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில செயலாளர் வேலு மனோகரன், மாநில பொருளாளர் கே.எத்திராஜ், மலேசியா பாண்டியன், ஏ.எம்.செல்வராஜ், பா.போஸ், எம்.ஆர்.பன்னீர்செல்வம், என்.சுப்பிரமணியன், கே.ராஜகோபால், டாக்டர் எம்.முத்து லட்சுமி, மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் பொட்டல் எஸ்.துரை, ஜி.பி.எஸ்.கே.நாகேந்திரன், மாநில வழக்கறிஞர் செயலாளர் கே.சபாபதி, ஏ.எஸ்.பழனியாதவ், தலைமை நிலைய செயலாளர் எஸ்.செல்வன் யாதவ், என்.எஸ்.சேதுமாதவன், ஓ.எம்.பி.ராமதாஸ், எம்.எம்.டி.ஏ.கோபி, ஆர்.தங்கப்பழம், எம்.தனுஷ்கோடி, டி.கோமதி நாயகம், டி.கருணாநிதி, என்.ஐ.சக்திவேல், என்.தேவதாஸ், கே.ராஜன், கோகுல கே.சேகர், என்.சுப்பையா, என்.சக்திவேல், ஓ.கே.முனியாண்டி, எம்.வி.புண்ணியசேகரன், சென்னை மண்டல தலைவர் கே.மனோகரன், செயலாளர் வழக்கறிஞர் கே.வேணு, கொள்கை பரப்பு செயலாளர் எம்.உதயகுமார், மாநில இளைஞரணி செயலாளர்கள் ஆர்.ஆர்.உதயகுமார், எம்.ஹரிகிருக்ஷ்ணன், மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் கே.ஆர்.மோகன், சி.ராஜாமன்னார், பி.கார்மேகம், தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பி.ராஜேந்திரன், எஸ்.ஏ.ரமேஷ்குமார், ஜி.விஜயகண்ணன், எல்.சுபாஷிணி, வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மஞ்சினி, ஏ.எஸ்.அன்பு யாதவ், எஸ்.நளபோஸ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கோகுல் கே.சேகர், எம்.வி.புண்ணியசேகரன், புருஷோத்தமன், திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கே.ராமமூர்த்தி, கே.எஸ்.முத்துக்கிருஷ்ணன், வி.தியாகராஜன். திருவள்ளூர் மத்திய மாவட்ட நிர்வாகிகள் வி.எத்திராஜ், ஜெ.மோகனரங்கன், ஜெ.விஜயகுமார் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது