தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: குற்றாலம் அருவி, மேகமலை அருவியில் மக்கள் குளிப்பதற்கு தடை நீட்டிப்பு!!

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி தேனி மாவட்டம் மேகமலை அருவிகளில் மக்கள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் வெள்ளப் பெருகினால் அடித்து வரப்பட்ட மரத்துண்டுகள், கற்கள் ஆகியவை அருவி இருக்கும் பகுதியில் குவிந்துள்ளன.

அதனை அப்புறப்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகளுக்கு பிராக்கு குற்றால அருவிகளில் குளிக்க மக்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையினால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அருவியில் கற்கள் தண்ணீரோடு கலந்து வருகிறது. தண்ணீர் வரத்து குறைந்து சீராகும் வரை சுற்றுலா பயணிகளுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆந்திராவில் அனைத்து கோயில்களின் பிரசாதங்களையும் ஆய்வுசெய்ய ஒன்றிய அரசு முடிவு

உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு!