கொட்டும் குற்றால அருவியால் பொங்கும் உற்சாகம்: நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் குற்றால சீசன் இந்த முறை தாமதமாக ஆரம்பித்தது. இருப்பினும் அங்கு தொடர்ந்து வெயில் அடித்து வந்ததால் அருவிகளில் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்தது. சாரல் மழையும் இல்லாமல் போனதால் சீசனை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பேரருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து ஆனந்தமடைந்தனர். கடந்த சில நாட்களாக வறண்டு கிடந்த அருவிகளில் தற்போது தண்ணீர் கொட்டுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!