உணவு பாதுகாப்பு அலுவலர் என கூறி மளிகைக்கடையில் பணம் மோசடி தம்பதி கைது

காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (43). இவர் காங்கயம்- தாராபுரம் சாலையில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் தனலட்சுமியும், அவரது மகள் ஹரிணியும் மளிகைக்கடையில் இருந்தனர். அப்போது, சொகுசு காரில் ஒரு தம்பதி மளிகைக்கடைக்கு வந்தனர். இருவரும் தாங்கள் கோவை மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் என்றும், மளிகைக்கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகவும், உடனடியாக அபராதம் செலுத்த வேண்டும் என கூறியும் ரூ.2500ஐ பெற்றுக் கொண்டு சென்று விட்டனர்.

இது குறித்து தனலட்சுமி அருகில் இருந்த கடைக்காரரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் தங்களது கடைக்கு அப்படி யாரும் வரவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து, புகாரின்படி காங்கயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இதில் அந்த தம்பதி பணம் மோசடியில் ஈடுபட்டதும், அவர்கள் கோவை போத்தனூர் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (24), சக்திபிரியா (23) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து,நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்தனர்.

Related posts

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை