நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

அகமதாபாத்: ஒருவர் நாட்டுக்காக சாக தேவையில்லை என்றும் ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில், கட்வா பட்டிதார் சமூகத்தின் அமீன் பிஜேகேபி வித்யார்த்தி பவன் ஹாஸ்டலை அமித் ஷா திறந்து வைத்து பேசுகையில்,‘‘ குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியில் கட்வா பட்டிதார் சமூகத்தினரின் பங்களிப்பு முக்கியமானது. கட்வா பட்டிதார் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் ஏராளமானோர் நாட்டின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

நாட்டுக்காக ஒருவர் சாக தேவையில்லை. நாட்டின் வளர்ச்சிக்காக வாழ வேண்டும். நீங்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், சார்ட்டட் அக்கவுன்டன்ட், டாக்டர் போன்ற படிப்புகளில் சிறந்து விளங்கலாம். ஆனால் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும்’’ என்றார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்,‘‘ மோடி முதல்வராக இருந்த போது அறிமுகப்படுத்திய பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் பெண் கல்வி திட்டங்களால் குஜராத் மாநிலம் கல்வியில் சிறப்பான இடத்தை வகிக்கிறது’’ என்றார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்