வீட்டில் வளர்த்து வந்த 9 நாட்டு கோழிகளை திருடிய வாலிபர் கைது: மேலும் மூன்று பேருக்கு வலை

பெரியபாளையம்: பெரியபாளையத்தில் வீட்டில் கூண்டு வைத்து வளர்த்த 9 நாட்டுக்கோழிகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.  பெரியபாளையம் அடுத்த வடமதுரை மல்லியான்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தமது வீட்டில் கூண்டு வைத்து நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இவர், காலையில் கோழிகளை மேய்ச்சலுக்காக திறந்து விட்டு பிறகு மாலையில் கூண்டில் அடைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு வழக்கம் போல மேய்ச்சலுக்கு பிறகு தமது 9 நாட்டுக்கோழிகளையும் மணிகண்டன் கூண்டில் அடைத்து விட்டு தூங்கச் சென்றார்.

இதனை தொடந்து, மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 நாட்டுக்கோழிகளும் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் நீண்ட நேரமாக தேடிப் பார்த்தும் கிடைக்காமல் போகவே இது குறித்து பெரியபாளையம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் இளைஞர் ஒருவர் நாட்டுகோழிகளை விற்பனைக்காக எடுத்து சென்றபோது அவர் பேரில் ஏற்பட்ட சந்தேகத்தின்பேரில் அவரை பிடித்து போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் கூண்டில் அடைத்து வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகளை திருடி வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து 9 நாட்டுக்கோழிகளை அவரிடம் இருந்து மீட்ட காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தன்ராஜ்(23) என தெரிய வந்தது.

இவர் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடுகளில் இருந்து அவற்றை திருடி வந்து இறைச்சி கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து தன்ராஜை கைது செய்யப்பட்டார். பின்னர் ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த திருட்டில் ஈடுபட்ட மேலும் மூன்று பேரை பெரியபாளையம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் கூண்டு வைத்து வளர்த்து வந்த நாட்டுக்கோழிகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்