வாக்கு எண்ணிக்கைக்காக மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக மதுரை மருத்துவக் கல்லூரியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் திங்கட்கிழமைக்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் சங்கம் சார்பில் ராஜா முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மதுரை மருத்துவக் கல்லூரியில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பயின்று வருகின்றனர். மக்கவை சட்டப்பேரவை உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறும் போது மதுரை மருத்துவக் கல்லூரி தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் ஆணையத்தால் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுவதோடு, பதிவான வாக்குகள் மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இவற்றின் காரணமாக, மருத்துவக் கலலூரி மாணவர்கள் மருத்துவ ஆய்வகங்கள், வகுப்பறைகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாணவர்களை காவல் துறையினர் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் காவல் துறையினருடன் பிரச்னை ஏற்பட்டு, நாங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என மனுவில் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் திங்கட்கிழமைக்குள் தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

Related posts

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

வீட்டுமனை பட்டா கோரி மனு

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா