கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்றது அம்பலமானது. மெத்தனால் உடன் தண்ணீரை கலந்து விற்பனை செய்து வந்ததாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. வெளி மாநிலத்தில் இருந்து மெத்தனால் வாங்கி விற்பனை செய்ய பன்சிலால், கவுதம் உரிய உரிமம் பெற்றுள்ளனர். பன்சிலால், கவுதம் ஆகியோர் மொத்தமாக மெத்தனால் வாங்கி விற்பனை செய்து வந்தது சிபிசிஐடி விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 11 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தி வருவதாகவும், வழக்கு விசாரணை தொடர்பாக யாருக்கும் சம்மன் அனுப்பப்படவில்லை என சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!