இருமல் மருந்துகள் ஏற்றுமதிக்கு ஆய்வக பரிசோதனை கட்டாயம்: ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு

புதுடெல்லி: இருமல் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு ஆய்வகங்களில் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசு அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு நிறுவன மருந்துகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவில் தயாரித்து அனுப்பப்பட்ட இருமல் மருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதையடுத்து இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகள் பிற நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு முன்பு அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த உத்தரவு என்பது ஜூன் ஒன்றாம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். அவர்கள் வழங்கும் சான்றிதழையும் சமர்ப்பித்ததால் தான் மருந்தை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வழங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு