ஊழலை பற்றி பேச பாஜகவிற்கு தகுதியில்லை; தமிழச்சி தங்கப்பாண்டியன் பேட்டி

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன், தேர்தல் இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் மின்னல் வேக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தொதிகு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எந்தெந்த பகுதிகளில் எந்நெந்த தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு நேரில் செல்லும் தமிழச்சி தங்கப்பாண்டியன், அங்குள்ள மக்களிடம் வாக்குறுதிகள் அளித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருவது நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. அதேபோன்று வீடு, வீடாக சென்று மக்களுடன் உறவினர்களை போல பேசிபழகி வாக்கு சேகரிப்பது பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை அதிகரிக்க செய்துள்ளது.

இதனால் தொகுதி முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர் மாலைகளை அணிவித்தும் தங்கள் வீட்டு உணவை கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் மயிலாப்பூர், நந்தனம், ஆர்.ஏ.புரம், அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். பின்னர் நிருபர்களிடம் தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியதாவது : இந்தியா கூட்டணியின் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளரான என்னை ஆதரித்து மயிலாப்பூர் தொகுதியில் இன்று மூன்றாம் கட்ட பிரச்சாரம் காலை கேம்பன் ரோடு சாலையில் தொடங்கியதாகவும் வழி எங்கும் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வாசலிலே உதயசூரியன் சின்னம் கோலமிட்டும் நம்முடைய முதலமைச்சரின் திட்டங்களை வரைந்தும் எங்களை வரவேற்று வருகின்றனர்.

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் விரைந்து கட்டப்பட்டு வருகிறது இது திராவிட மாடல் அரசுக்கு நமது முதலமைச்சர் அவர்களுக்கும் கிடைத்த மாபெரும்வெற்றி. அதை தொடர்ந்து பேசி அவர் 40 தொகுதிகளில் மட்டுமல்ல இந்திய அளவில் இந்தியா கூட்டணி கட்டாயம் வெற்றி பெறும் இது உறுதி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. அதே சமயம் பாஜகவின் அறிக்கை ஒரே நாடு ஒரே ஆட்சி என்று இந்தியாவின் பன்மை தன்மையை குறிக்கும் தேர்தல் அறிக்கையாக பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. ஊழலை பற்றி பேசுவதற்கு கொஞ்சம் கூட தகுதியற்ற கட்சிதான் பாஜக. ஊழலை அரசுடைமையாக்கும் வகையில் தேர்தல் பத்திரத்தை அறிமுகம் செய்தவர்களே இவர்கள்தான். வரும் 17ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சென்னை மற்றும் தென்சென்னை இரண்டு தொகுதிகளுக்கும் சேர்ந்து தேர்தல் பரப்புரை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது