ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு?

திருமலை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டத்தில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதாகி ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மின்விசிறி வசதி கூட செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, மருமகள் பிராமினி, தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவர் பய்யாவுல கேசவலு ஆகியோர் ேநற்று சிறைக்கு ெசன்று சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர்.

பின்னர் வெளியே வந்த பய்யாவுல கேசவலு கூறுகையில், ‘சந்திரபாபு நாயுடுவுக்கு மின்விசிறி வசதி கூட செய்து தரப்படவில்லை. மனஉளைச்சல் மற்றும் அதிக வெப்பம் காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவர்களிடம் ெதரிவித்து, தனக்கு சிறந்த வசதிகளை செய்து தரும்படி சந்திரபாபு நாயுடு கேட்டு கொண்டுள்ளார்.

உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திரபாபு நாயுடுவை பாதிப்படைய செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் உள்ளனர்’ என்றார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி