மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை கைவிட முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாநகராட்சி, தூய்மை பணிகளை தனியாருக்கு கான்ட்ராக்ட் விடுவதை கைவிட வேண்டும். இதற்கான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.தொழிலாளர்கள் போராடி வரும் சூழலில் பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு எட்டப்படவில்லை.

ஒன்றிய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகளை காரணம் காட்டி ஒடுக்கப்பட்ட பகுதி தொழிலாளர்கள் பெரும்பான்மையாக பணிபுரியும் தூய்மை பணியை ஒப்பந்தம் விடுவது பொருத்தமான நடவடிக்கை அல்ல. கழிவுகளும், குப்பைகளும் நாள்தோறும் அதிகரித்து வரும் சூழலில் ஏற்கனவே தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த ஒப்பந்த முறையை கைவிடவும் அதுதொடர்பான அரசாணைகள், நிர்வாக உத்தரவுகளை திரும்பப் பெறவும் முன்வர வேண்டும். போராடும் ஈரோடு மாநகராட்சி தொழிலாளர்கள் பிரதிநிகளை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்ட வேண்டும்.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு